மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: அதிபரிடம் விசேட கோரிக்கை
பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அதிபரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி கட்சிகள் தீர்மானித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன என்பவர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.
கோரிக்கை
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளதால், அவர்களுக்கு நிவாரணமாக ஏதாவது வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது முக்கியம் என அதிபரிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும், நடைபெறாவிடின் அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, சிறிலங்காவின் நிதி அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.