வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பீரிஸ்
gazette
g.l.peiris
ministerial-post
By Sumithiran
வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட 2272/04 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி