சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை பாரியளவு வீழ்ச்சி
Iran
Fuel Price In World
Iran-US Conflict
By Jaso
வோஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான உறவுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.89 சதவீதம் சரிவடைந்து ஒரு பரல் 71.57 டொலராகக் குறைந்துள்ளது.
இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் விலைகள் பாரிய வீழ்ச்சி
அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையும் 1.32 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பரல் 68.58 டொலராக வர்த்தகமாகி வருகிறது.

இந்த இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்களின் மிகக் குறைந்த விலையை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி