கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By pavan
கோழி இறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விடயங்களை அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தோலுடனான ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விலை நிர்ணயமானது இன்று (19) முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி உற்பத்தி செலவு
அதேவேளை, உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் எனவும் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி