அடக்குமுறை சட்டம் வேண்டாம் : யாழில் போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
SL Protest
By Raghav
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19.07.2025) யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
கையெழுத்து போராட்டம்
இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச்செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் அடையாள கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி