முடங்கியது யாழ். போதனா வைத்தியசாலை சேவைகள்...! பெண் வைத்தியர் வன்கொடுமையின் எதிரொலி
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் (Teaching Hospital Jaffna) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சேவையை பெற வந்த நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக எமது சேய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் (Teaching Hospital - Anuradhapura) பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் () மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது
முதலாம் இணைப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று (12.03.2025) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (11) பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்
நேற்றுமுன்தினம் (10) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்திமுனையில் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இதற்கு நீதி கோரி, வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் GMOA இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
மேலும், இது போன்ற சம்பவங்கள் வைத்தியர்களுக்கு, குறிப்பாக பெண் வைத்தியர்களுக்கு பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துவதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் GMOA வலியுறுத்தியுள்ளது.
இதனால், GMOA உறுப்பினர்கள் தனியார் பயிற்சி மற்றும் மாற்று பணிகளைத் தவிர்த்து, ஒருமைப்பாட்டுடன் இந்த பணிப்புறக்கணிப்பில் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் அலட்சியம் - அறுவை சிகிச்சையின் பின் பறிபோன 3 வயது சிறுவனின் உயிர்...! நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்