ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
Sri Lanka Police
Sri Lanka
Galagoda Aththe Gnanasara Thero
By Raghav
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ( Galagoda Aththe Gnanasara) சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக, ஞானசாரருக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலை
இந்நிலையில், அவருக்கு சுகவீனம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்