கொட்டும் மழையிலும் கொழும்பில் நடைப்பயணத்தை ஆரம்பித்த ஞானசார ஆதரவு கூட்டணி
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் இணைந்துள்ளனர்.
கண்டியில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணியானது இன்று கொழும்பை வந்தடைந்த நிலையில், கொட்டும் மழையையும் பாராது குறித்த தரப்பினர் குடையுடன் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பேரணியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்பன்பில உள்ளிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் சர்வஜன பலய கூட்டணியின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சிறை தண்டனை
சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்காக மகா சங்கத்தினரால் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞானசார தேரர் மீதான சிறைத்தண்டனை மற்றும் சிறையில் அவரது துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சில தரப்பினரால் கடும் எதிர்ப்பை வெளியிடப்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தை பல அரசியல் கட்சிகள் அரசியல் பகடையாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டும் வருகின்றது.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |