சிங்கராஜா வனத்தில் மாயமான பெண்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
Missing
Cardamom
Singaraja Forest
By Mkkamshan
கடந்த 12 ஆம் திகதி சிங்கராஜா வனத்திற்கு ஏலக்காய் பறிக்கச் சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று சூரியகந்த காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்களை காவல்துறையினர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடிய நிலையில் இன்று வனத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள் 39 மற்றும் 40 வயதுகளையுடைய இத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்