கோட்டாபய தொடர்பில், ரணில் எடுத்த தீர்மானம்..! அறிவித்தது மொட்டுக் கட்சி
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாதகமான பதில் வெளியிட்ட ரணில் அதிபர் ரணில்
விக்ரமசிங்கவிற்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போது, முன்னாள் அதிபரை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்கின்றமை தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் அதிபரிடமிருந்து சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த நிலையில், வெகுவிரைவில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு மீண்டும் வருகைத் தருவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,