விடுதலை புலிகளின் 120 பொதிநகைகள் கைமாற்றம் : தங்க விலையின் ஏற்றத்துடன் விற்க முயற்சி
அண்மைய நாட்களாக தமிழர்களுக்கு சொந்தமான சில விடயங்களை உரிமை கோராவிட்டால் அரசுக்கு சொந்தமாக்குவதில் அதிக ஈடுபாட்டை அநுர அரசாங்கம் காட்டி வருகின்றது.
இதன் ஆரம்பக்கட்டமாக தமிழர்களது காணியை அரச காணிகளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தவுள்ளதாக வர்த்தமானியொன்று வெளியாகி சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருந்தது.
குறித்த வர்த்தமானி கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியாகி இருந்த நிலையில், இது தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
அதாவது, வடக்கில் தமிழர்களது உரிமை கோரப்படாத 5,940 ஏக்கர் காணிகளை அரச காணிகளான பிரகடனப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது அரசினால் திட்டமிட்டு இரகசியமாக முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இவ்வாறான பிண்ணனியில், இறுதி யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுமக்களின் மீட்க்கப்பட்ட தங்கத்தை அவர்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், காணிகளை தொடர்ந்து தற்போது குறித்த தங்கம் தொடர்பிலும் உரிமை கோரப்படாவிட்டால் அவையும் அரச உடமையாக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் மக்களை திசை திருப்பி விட்டு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தமிழ் தலைமைகள் இடத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன் இவை விமர்சனத்திற்குரிய விடயமாகவும் மாறியுள்ளது.
இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பில் அரசின் நடவடிக்கை, தமிழ் மக்கள் நிலங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை மற்றும் தேர்தல் கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
