சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலை வீழ்ச்சி...!
Silver
Gold
World
By Shalini Balachandran
சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஓர் அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,095 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
விலை மாற்றம்
அதேநேரம், வெள்ளி ஓர் அவுண்ஸ் இன்றையதினம் 83.15 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனச் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி