தங்க நகைகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
Abu Dhabi
Gold
By Sathangani
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் (Abu Dhabi) இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய காவல்துறையினர் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து 4 தங்கச் சங்கிலிகள் மற்றும் 2 வளையல்கள் உள்ளிட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி