இலண்டனில் தமிழர்களிடம் நகை அபகரிப்புகள் : குற்றக் குழுக்களின் தொடர் கைவரிசை
லண்டனில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் உட்பட்ட இடங்களில் நகைகளை அபகரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கோடைகால கோவில் திருவிழாக்கள் உட்பட நிகழ்வுகளில் பங்கெடுபப்பவர்கள் அவதானத்துடன் இருக்கவேண்டிய நிலை எழுந்துள்ளது.
ஹரோ போன்ற நகரங்களில் ஏற்கனவே சில தமிழ்பெண்களின் நகைகளை திட்டமிட்டு இயங்கிய குழுக்களால் அபகரித்துச்செல்லப்படும் சம்பவங்கள் அண்மைய நாடகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அங்காடிகளுக்கு செல்பவர்கள் பேருந்துகளில் இறங்கி செல்பவர்கள் வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு செல்பவர்களை பின்தொடர்ந்து செல்லும் இரண்டு மூன்று பேர் கொண்ட வெள்ளைத் நிற தோல்கொண்டவர்கள் இந்த நகை அபபரிப்பில ஈடுபடட நிலையில்
பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை
தற்போது ஆண்களின் நகையும் பறிக்கும் சம்பவங்களும் லண்டன் தொடருந்து நிலையங்களில் நடந்த ஒரே மாதிரியாக இடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறான சம்பவங்களை செய்த சந்தேகநபர்களை, காணொளியில் இருந்து பெறப்பட்ட நிழற்படங்கள் மூலம் பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை பகிரங்கப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் நிலத்தடி நிலையத்தில் விக்டோரியா லைன் தொடருந்து மேடையில் முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மூவர் பறித்து சென்றுள்ளனர்.
தங்கத்தின் விலை
இந்த சம்பவத்தின் பின்னர் அதே சந்தேக நபர்களால் யூஸ்ரன் தொடர்ந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்னொரு ஆணிடம் இருந்தும் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில் கொள்ளையர்களை எதிர்க்க முயன்றவர்கள் மீது பெப்பர ஸ்ப்ரே எனப்படும் காரதெளிப்பான் வாயு பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் தமிழ் பெண்கள் உட்பட்ட தெற்காசியர்கள் ஒழுங்கமைக்பட்ட குற்றக்கும்பல்களால் குறிவைக்கப்கபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
