அதிர்ச்சி தரும் தங்கத்தின் விலை - உலக சந்தையில் நடக்கும் மாற்றம்
போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாக வெளியாகும் செய்திகள் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (01.04.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,695.96 டொலர்களாக பதிவாகியுள்ளது.
மோசமான மாதாந்த வீழ்ச்சி
ஈரான் போர் காரணமாக அதிகரித்துள்ள பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்பு, இலாபமீட்டாத உலோகமான தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தைக் குறைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் 2008 ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான மாதாந்த வீழ்ச்சியை நோக்கித் தங்கம் நகர்ந்து வருகின்றது.
மார்ச் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 11.8% வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் வெள்ளியின் விலை 6.7% உயர்ந்து $74.64 ஆக உள்ள போதிலும், இந்த மாதத்தில் மட்டும் 20.4% சரிவைக் கண்டுள்ளது.
எனினும், தங்கத்தின் விலை 2026 இறுதிக்குள் $5,400 வரை உயரக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) கணித்துள்ளது.
அதேவேளை, BMI நிறுவனம் 2026-க்கான சராசரி விலையை $4,600 ஆகக் கணித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்