வாரத்தின் ஆரம்பத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்