இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருதல்
''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.

இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.
இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர். இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.
இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள முதலமைச்சர் விஜய் | TVK