இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்க விலை
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(16) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 406,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 408,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 375,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்த விலை
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,913 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |