மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலையானது உலக சந்தையில் நாளுக்கு நாள் மாற்றமடைந்த வண்ணம் உள்ளது.
உலக சந்தையில் ஏற்படும் தங்கத்தின் விலை மாற்றத்திற்கு அமைய இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையானது மாற்றமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது உயர்வடைந்து வருகின்றது.
தங்கத்தின் விலை நிலவரம்
இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இலங்கை ரூபாவின் படி 652,385 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் 184,100 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 168,850 ரூபாவாக உயர்ந்துள்ளது.
குறித்த விலை மாற்றத்தினால் ஆபரண தங்கத்தின் விலையும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுன்கிறது.
கடந்த கால ஒப்பீடு
கடந்த காலங்களில் 22 கரட் தங்கப் பவுணாது 200,000 ரூபாவை நெருங்கி இருந்ததுடன், பின்னர் அது வீழ்ச்சியடைந்து தற்போது மீண்டும் தங்கத்தின் விலையானது உயர ஆரம்பித்துள்ளது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
