அதிரடியாக சரிந்த தங்கம் விலை - நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் இன்று (04) குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், உள்ளூர் தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தங்கத்தின் விலை
நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 380,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CPHFG9M
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 8 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்