நூதன முறையில் இந்தியாவுக்கு கடத்தப்பட்ட கோடிக்கணக்கான தங்க கட்டிகள்!
Gold Price in Sri Lanka
Gold smuggling
Gold
By pavan
இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர் மண்டபம் கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது இலங்கைப் பகுதியில் பயணித்த கப்பலை பரிசோதித்துள்ளனர்.
இந்த படகில் பயணித்த இருவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
14 கோடி பெறுமதி
இதன்போது அவர்கள் இலங்கையில் இருந்து 14 கோடி பெறுமதியான 8 கிலோகிராம் தங்கத்தை கடத்தி சென்றமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் படகையும் பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
