ஆடைக்குள் தங்க பிஸ்கட் - நள்ளிரவில் விமான நிலையத்தில் ஆசிரியை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 2 கோடி 45 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் தொகுதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றும் 29 வயதுடைய ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்க பிஸ்கட் தொகுதி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவரது உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பணப்பைகளில் 436 கிராம் நிறையுடைய நான்கு தங்க பிஸ்கட்டுகளும், மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் துண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்கம் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது தங்க பிஸ்கட் தொகுதி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபரான பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |