திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப் பகலில் திருட்டு !

Trincomalee Sri Lanka Senthil Thondaman Gold
By Shalini Balachandran Aug 10, 2024 08:12 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

பல நூறு வருட காலமாக சோழர் காலம் தொடக்கம் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த தாலி போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் பட்ட பகலில் திருட்டு போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கிய நிலையில் கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பதிக்கப்பட்ட ஐந்து சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்புலன்ஸில் சிறிலங்கா இராணுவ அதிகாரியின் இழி செயல்

அம்புலன்ஸில் சிறிலங்கா இராணுவ அதிகாரியின் இழி செயல்

மதிப்புள்ள தாலி

ஒரு பெண் கழுத்தில் தாலி இறங்குவது என்பது கணவன் இறந்து அவருடைய உடல் செயலிழந்ததன் பின்னரே அதே போல் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா ? என பொது மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப் பகலில் திருட்டு ! | Gold Thali Chain Theft In The Temple

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை காவல்துறை முறைப்பாடு கூட செய்யவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது திருகோணேஸ்வர ஆலய நிர்வாகத்தின் வழமை ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவும் வைரம் மற்றும் வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருடு போய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கனடாவில் காணாமற்போன தமிழர் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு

கனடாவில் காணாமற்போன தமிழர் : காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு

பொதுமக்களால் முறைப்பாடு 

காவல்துறையினருக்கு பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானை (Senthil Thondaman) சந்தித்து இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி பட்டப் பகலில் திருட்டு ! | Gold Thali Chain Theft In The Temple

இது திருகோணமலை மக்களுக்கு ஒரு தோஷம் என்றும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர் அத்தோடு இனிவரும் காலங்களில் திருக்கோணமலை மக்களுக்கு இருண்ட காலக்கட்டமாக மாறி உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் அல்ல : சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தமிழர்களின் அடையாளம் அல்ல : சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023