பெரியவெள்ளி நிகழ்வை முன்னிட்டு மன்னாரில் தாகசாந்தி ஏற்பாடு
இயேசு கிறிஸ்துவின் மரண நாளை நினைவு கூறும் விதமாக உலக வாழ் கிறிஸ்தவர்கள் பெரியவெள்ளி நிகழ்வை அனுஷ்டித்து வருகின்ற வேளையிலே, இலங்கையிலும் அனைத்துப் பாகத்திலும் இருக்கும் கிறிஸ்தவர்களாலும் இந்நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று வியாழக்கிழமை (28) இரவில் இருந்து கத்தோலிக்க தேவாலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் மத அனுஸ்ரானங்களும் இடம் பெற்று வருகின்றது
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (29) வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்துவின் மரண நாளை நினைவு கூறும் பெரிய வெள்ளி நாளை அனுஷ்டித்து வருகின்றனர்.
தாக சாந்தி
இந்நிலையில், இன்றைய தினம் (29) மன்னாரில் நண்பகல் வேளையிலே மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் தாக சாந்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக சாந்தியானது பொது மக்களாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் உட்பட பல்வேறு தாக சாந்தி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இயேசுவின் மரணம்
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஏராளமான பொது மக்கள் வரிசைகளில் நின்று தாக சாந்தியை பெற்று கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரம் கிறிஸ்தவமதத்தை சேர்ந்த அமைப்புக்களாலும் இன்றைய தினம் பொது இடங்களில் இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் வழிபாடுகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |