புலம்பெயர்ந்து வாழும் இளைஞனுக்கு சரியான நேரத்தில் அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சிக்கடலில் அவர்
புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன்
வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன் தனது திருமணத்திற்காக பணத்தேவையை எதிர்பார்த்திருந்த நிலையில் அதிஷ்டக்காற்று அவர் பக்கம் அடித்துள்ளது.
அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் மிகப்பெரிய பரிசு விழுந்து அவரை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியுள்ளது.
கேரளாவை சேர்ந்த முகமது பொன்னம் குலம் என்ற 31 வயதான இளைஞரே 100,000 Dirham பணத்தை வென்றவராவார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகமது அங்கு வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார்.
திருமணத்திற்காக பணத்தேவை
இது தொடர்பில் முகமது கூறுகையில், திருமண நிகழ்வுக்கு பெரியளவில் செலவாகும் என்று உங்களுக்குத் தெரியும். இந்த பணத்தை சரியான நேரத்தில் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
என் திருமணச் செலவு தவிர, என் அம்மாவுக்கு தங்கத்தில் பரிசும் வாங்க விரும்புகிறேன்.
அத்துடன் என் தொழில் வளர்ச்சிக்கும் செலவிடுவேன் என கூறியுள்ளார். முகமது இந்தாண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.