கிளிநொச்சியில் ஆடு மேய்த்தவருக்கு அடித்த அதிஷ்டம் -அவரின் செயலுக்கு குவியும் பாராட்டு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Magistrate Court
Money
By Sumithiran
ஆடு மேய்த்த ஒருவருக்கு அதிஷ்டம் அடித்தபோதிலும் அவரின் நெகிழ்ச்சியான செயலால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் கிடந்த பெருந்தொகைப்பணம்
குறித்த நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவேளை வீதியில் 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை கண்டெடுத்துள்ளார்.
இவ்வாறு கண்டெடுத்த பணத்தை கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்த நிலையில், எவரும் அதற்கு உரிமை கோராத நிலையில் குறித்த பணம் இன்றைய தினம் கிளிநொச்சி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையில் ஒப்படைப்பு
இந்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
வீதியில் கிடந்து எடுத்த பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு நல்லுள்ளம் கொண்ட அவரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 18 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்