நாட்டிற்கு பல மில்லியன் டொலர்களை அள்ளிக் கொட்டும் பெண்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.
அதிகூடிய டொலர் வருமானம்
கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஏழு மாத காலப்.பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 2.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும் அதில் கணிசமான அளவு பிரச்சார மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக மீண்டும் வெளிப்பாய்ச்சப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் மத்திய கிழக்குப் பணியாளர்களே அண்மைக்காலத்தில் அதிகூடிய டொலர் வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

