முட்டை குறித்து நுகர்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்...
Sri Lanka
Economy of Sri Lanka
Egg
By Sathangani
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அந்த முட்டைகளை வெதுப்பகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வேலைத்திட்டம்

அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை 42 ரூபாய் என அவர் மேலும் தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி