அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் : வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
Ranjith Siyambalapitiya
Government Employee
By Sumithiran
அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
அரச ஊழியர்களின் அதிகரித்த சம்பளம்
"அரசு ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 5,000 கொடுத்துள்ளோம்.
ஏப்ரல் மாத சம்பளத்துடன் 10000 சேர்க்கப்படும். ஏப்ரல் 10-ம் திகதிக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தயாராக உள்ளோம்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்