கனடாவில் வாடகைக்கு இருப்போருக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதன்படி வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு
சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கனடிய மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் கனடியர்கள் கடின உழைப்பினை
குறிப்பாக கடன் புள்ளிகள் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. இளம் கனடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு வருவதாகவும் அவர்களுக்கு நலன்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |