பாடசாலை மாணவர்களுக்காக அநுர அரசு எடுத்துள்ள தீர்மானம்
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (02.11.2024) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியள்ளார்.
புதிய பாடத்திட்டம்
இதேவேளை, 2025ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 இற்கு 08 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 10 ஆகிய தரங்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகவுள்ளது.
இந்நிலையி்ல், இந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ் சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும் நடைபெறவுள்ளது.
மேலும், சுகாதாரமும் உடற்கல்வி, விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் போதுமான அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |