குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கொடுப்பனவு
நாட்டில் அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த தீர்மானம் எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
விசேட கொடுப்பனவு
இந்த சதவீதம் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.
இதேவேளை, 53.2% பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர் என்பதுடன் 26.1% பாடசாலை உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவுள்ளார்.
அதன்படி, பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனாதைக் குழந்தைகள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் அனாதை இல்லங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபா உதவித்தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        