இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : மீண்டும் ஆரம்பமான சேவை
பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சுற்றுலா தொடருந்து சேவை நேற்று (01) முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மலையக தொடருந்து பாதை பதுளை வரை நீடிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் புதிய விசேட சுற்றுலா தெடருந்து சேவையை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விசேட சுற்றுலா தொடருந்தின் பெயர் 'கலிப்சோ' என பெயரிடப்பட்டுள்ளது.
தொடருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
ஆனால் தொடருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக்குழு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை முதல் நாளில் மட்டுமே செயல்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மீண்டும் ஆரம்பம்
இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த தொடருந்து சேவை மீண்டும் அனைத்து வசதிகளுடனும் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தொடருந்து பதுளையில் இருந்து புறப்பட்டு, தெமோதரவில் 10 நிமிடங்களும், எல்ல 9 ஆர்ச் பாலத்தில் 10 நிமிடங்களும் நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதியை காணும் வாய்ப்பை வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |