வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விவசாய அமைச்சு மகிழ்ச்சியான தகவலொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறித்த கோழிக்குஞ்சுகளை இலவசமாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்
இதனை கருத்திற்கொண்டே விவசாய அமைச்சு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டமொன்றை தேசிய ஹதபிம அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 ஆயிரம் நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |