இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் வெளியான வர்த்தமானி
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழு எட்டப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர்,
சர்வதேச கிரிக்கெட் பேரவை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை ரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Today, I signed a gazette to revoke the decision appointing an interim committee for Sri Lanka Cricket, aiming to lift our ICC suspension. I've also written to the ICC, seeking their observations on the Auditor General's report on SLC, and to the AG dept for future actions.
— Harin Fernando (@fernandoharin) December 12, 2023
இதேவேளை, இலங்கை கிரிக்கட் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |