இலங்கையர்களுக்கு ஜப்பான் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் இருந்து திறமையான பணியாளர்களை அழைப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பானிய தூதுவர் மிசிகோஷி ஹெடாகி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் புதிய தூதுவராக அண்மையில் பதவியேற்றுக்கொண்ட அவர், இன்று (09) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. கடந்த சில வருடங்களாக, இலங்கையும் ஜப்பானும் குறைந்த திறன் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) செய்து கொண்டன.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கூற்றுப்படி, குறிப்பிட்ட திறன்மிக்க மனிதவள ஆட்சேர்ப்பு திட்டத்தின் (SSWRP) கீழ் 14 துறைகளில் இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதுடன் ஜப்பானில் வேலை வாய்ப்புகளையும் பெறுவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.