பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கண்டி (Kandy) நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 21 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட 37 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலதா கண்காட்சி
மேலும், தலதா கண்காட்சி நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படுவதால் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தலதா கண்காட்சியின் போது கண்டிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரி டி.சி.டி.இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
