இஸ்ரேலில் விசா இன்றி தவிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தின் இரண்டாவது கூட்டத்தில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நாடாளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பை உருவாக்குவது குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தூதுவர் வெளியிட்ட தகவல்
மற்ற வெளிநாட்டினரும் விசா இல்லாமல் இருப்பதால், இந்த விஷயத்தை இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குழுவிடம் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகத் தூதர் தெரிவித்தார்.
இந்த விடயம் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், இஸ்ரேல் இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் மருத்துவர். சேகா மெலாகு, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் துணைத் தலைவர் ஹேமந்த ஏகநாயக்க ஆகியோரும் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
