அதிர்ஷ்டம் தினமும் கதவை தட்ட வேண்டுமா! இந்த இரண்டு செடிகள் போதும்
உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவர வேண்டுமா? அதற்கு ஒரு வழி இருக்கின்றது.
நமது வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்க, அதிர்ஷ்டம் தினமும் வீட்டின் கதவை தட்ட இரு செடிகளை மாத்திரம் உங்களது வீட்டில் வளர்தால் போதும்.
குறித்த அதிர்ஷ்ட செடிகளை வீட்டில் வளர்க்கும் போது சரியான திசையில் வளர்ப்பது மிக முக்கியமாகும். அதன்படி, அந்த வாஸ்த்து செடிகள் குறித்து பார்க்கலாம்.
துளசி
துளசி மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் கிடையக்கூடிய ஒரு பயனுள்ள தாவரமாகும். இது புராணக்காலம் முதலே முனிவர்களாலும், மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறது.
இது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளதுடன் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியையும் பரப்புகிறது.
மேலும் இதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
செடி வைக்க வேண்டிய திசை
இந்த துளசி செடியை வீட்டின் "பிரம்ம ஸ்தானம்" என்றும் அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் இதனை வைக்க வேண்டும். ஒருவேளை அங்கு வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் காலை சூரிய ஒளி படும் வகையில் வைக்கலாம்.
துளசியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.
துளசி செடியை சரியான திசையில் வைப்பதால் பணவரவும் மற்றும் அதிர்ஷ்டமும் குவியும் என நம்பப்படுகின்றது.
மல்லிகை
இந்த மல்லிகை செடி ஒரு தனித்துவமான இனிமையான வாசனையுடன் மனதைக் கவரும் அழகான சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது.
இதன் இனிமையான மற்றும் புதிய நறுமணம் மனநிலையை இலகுவாக்குவதோடு வீட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை வழங்குகிறது.
தனித்துவம் நிறைந்த இந்த மல்லிகை செடியை காலை மற்றும் மாலை சூரிய ஒளி மட்டும் படும் வகையில் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்