நல்லாட்சி அரசில் 50 வீதத்தால் குறைக்கப்பட்ட பொருட்களின் விலை : ரஞ்சித் மத்தும பண்டார

Maithripala Sirisena R M Ranjith Madduma Bandara Sri Lanka Electricity Prices Economy of Sri Lanka
By Sathangani Jan 20, 2025 09:54 AM GMT
Report

2015 நல்லாட்சி அரசாங்கத்தில் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,' “இந்த அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே தவிர குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மின்கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானமும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டவையல்ல. அது சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானமாகும்.

இதேவேளை மின்சக்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு இதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரியவருகிறது. அதன் காரணமாகவே இந்த தீர்மானம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. எவ்வாறிருப்பினும் தொடர்ச்சியாக இவ்வாறு செயற்பட அரசாங்கத்தை அனுமதிக்கப் போவதில்லை.

2015 நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாட்களில் நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டன.

அது மாத்திரமின்றி பாரியளவில் மின் கட்டணமும் குறைக்கப்பட்டது. விலை குறைப்புக்கள் மாத்திரமின்றி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதியம் என்பனவும் அதிகரிக்கப்பட்டன.

உத்தேச தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்“ என தெரிவித்தார்.  

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தியில் காண்க....

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்

யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் : டக்ளஸ் சந்தேகம்

யாழில் சர்ச்சையை கிளப்பிய கலாசார மத்திய நிலைய பெயர்ப் பலகை! கடற்றொழில் அமைச்சர் விசனம்

யாழில் சர்ச்சையை கிளப்பிய கலாசார மத்திய நிலைய பெயர்ப் பலகை! கடற்றொழில் அமைச்சர் விசனம்

அதிர்வை ஏற்படுத்திய யாழ். கலாச்சார நிலைய பெயர் மாற்றம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் வரவேற்கும் மோடி

அதிர்வை ஏற்படுத்திய யாழ். கலாச்சார நிலைய பெயர் மாற்றம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் வரவேற்கும் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026