ஞானசார தேரருக்கு விடுதலை கோரி நடந்த ஊர்வலத்தில் பங்குகொண்ட நபர் மீது தாக்குதல்
Colombo
Kandy
Galagoda Aththe Gnanasara Thero
By Dharu
ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி மகா சங்கத்தினரால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணியில் பங்கேற்ற ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று யக்கல (14) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிகள் பேரணிக்கு ஆதரவாக ஒரு சிறிய வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த நபர்
தாக்கப்பட்ட நபர் காயமடைந்துள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் குறித்த வாகனமும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |