உலக மக்களுக்கு கூகுள் விடுத்த அறிவிப்பு : நீக்கப்படவுள்ள ஜிமெயில் கணக்குகள்
செயல்படாத ஜிமெயில்(gmail) கணக்குகளை நீக்கத் தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதன் தயாரிப்பு நிர்வாகத் தலைவர் ரூத் கிரிஷெல்லி கூறுகையில், சுமார் இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
கூகுள் புகைப்படங்கள் மற்றும் ஜிமெயில் செய்திகள், கேலெண்டர் சந்திப்புகள், டிரைவ் ஆவணங்கள், தொடர்புகள் பதிவுகள் மற்றும் ஜிமெயில் கணக்கின் கீழ் உள்ள யூடியூப் வீடியோக்கள் நீக்கப்படும் என்று கூகுள் கூறுகிறது.
ஜிமெயில் கணக்குகள்
செயலற்ற ஜிமெயில் கணக்குகளை நீக்குவது பாதுகாப்பு நடவடிக்கை என்றும், ஜிமெயில் கணக்குகளை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்தால், அந்த கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூகுள் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, செயல்படாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் முன், அந்தந்த கணக்குகளின் உரிமையாளர்களுக்கு கூகுள் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
1.5 பில்லியன் பயனர்கள்
நீக்கப்பட்ட செயலற்ற ஜிமெயில் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜிமெயில் சேவையில் 1.5 பில்லியன் செயலில் உள்ள பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |