இனி செய்தி எழுதுவது மிக எளிது - கூகுள் அறிமுகம் செய்யும் புதிய தொழிநுட்பம்
Google
Artificial Intelligence
By Beulah
2 years ago
நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி செய்தி கட்டுரைகளாக உருவாக்கவென புதிய வகை தொழிநுட்பமொன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதனை ஜெனிசிஸ் என அழைக்கின்றனர்.
அத்துடன், இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தொழிநுட்பமாகும்.
பிரதான பணி
செய்தி எழுதுவதில் செய்தியாளருக்கு உதவுவதே இதன் பிரதான பணியாகும்.
தற்போது சிறிய அளவில் இயங்கி வரும் இந்த அம்சம், சில செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடிவமைப்பு கட்டத்தில் உள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.
