கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்... அவை என்ன தெரியுமா!
கூகுள் நிறுவனமானது அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அது ஏராளமான புதிய அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பதாகவும் ஒரு தரப்பால் கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்த அண்ட்ரொய்ட் 15 புதுப்பிப்பில் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) என்ற அம்சமும், லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) அம்சமானது பலர் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் சில பயனர்கள் மத்தியில் அந்தரங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கேள்விகளையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ளூடூத் மோட்
வழக்கமாக ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தை ஓஃப் அல்லது டிசேபிள் (Off or Disable) செய்துவிட்டால் என்னவாகும்? அடுத்த நொடியே போன் உடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான ப்ளூடூத் (Bluetooth) சேவைகளில் இருந்தும் பயனர்கள் முழுவதுமாக துண்டிக்கப்படுவார்கள்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பில் வரும் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) ஆனது ப்ளூடூத் ஐ (Bluetooth) எப்போதும் செயற்பாட்டு நிலையிலேயே வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
லுக்அப்
அதாவது, புதிய மாற்றம் செய்யப்பட்ட ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தில் ப்ளூடூத் ஓஃப் (off) செய்யப்பட்டாலும் பார்ப்பதற்கு ஓஃப் செய்யப்பட்டு இருப்பது போல தோன்றினாலும், அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-energy state) தொடர்ந்து செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக இந்த புதுப்பிப்பு அறிமுகப்படுத்தவுள்ள லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பானது, தொலைபேசிக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இனங்கண்டு அழைப்பை ஏற்க வேண்டுமா, புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |