ஆயிரக்கணக்கான சேனல்களை நீக்கிய யூடியூப்
தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.
இதில் 7,700 இற்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷ்ய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் காணொளிகளை தொடர்ந்து அவை வெளியிட்டு வந்ததாகவும் யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.
யூடியூப் நீக்கிய பெரும்பாலான சேனல்களின் காணொளிகள் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ளன.
ரஷ்ய மொழி
அவை பெரும்பாலும் சீன அரசு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின்பிங்க்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் இருந்ததாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக நீக்கப்படட் சேனல்களில் 2,000 சேனல்கள் ரஷ்ய மொழியில் காணொளியில் வெளியிட்டுள்ளன.
ஆதரவான பார்வை
இவை ரஷ்யாவுக்கு ஆதரவான பார்வைகளைப் பகிர்ந்ததோடு மட்டுமின்றி நேட்டோ, உக்ரைன், மேற்கு நாடுகளை விமர்சிக்கும் வகையில் காணொளிகள் வெளியிட்டுள்ளன.
கூகுளுக்குச் சொந்தமான பகுப்பாய்வுக் குழுவினர், உலக அளவிலான இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் தளத்தை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், நேர்மையானதாக வைத்துக்கொள்ளும் பொருட்டு இப்பணிகளைச் செய்து வருவதாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
