2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்கள்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான விடயங்கள் வெளியிடப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் முதன்மையான இடங்களைப்பெற்ற முதல் 10 சுற்றுலாத்தலங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில், சுற்றுலா பயணிகளுக்கு எளிதில் செல்ல உகந்த நாடாக வியட்நாம் விளங்குகிறது, இங்குள்ள உணவுகள் மற்றும் இடங்கள் பயணிகளை வெகுவாக கவர்வதனால், மற்ற நாடுகளைக் காட்டிலும் வியட்நாம், பயணிகளுக்கு பாதுகாப்பானதாகவும், எளிதில் பயணிப்பதற்கு வசதியாகவும் உள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாபயணிகளை ஈர்த்த வியட்நாம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
இலங்கை
அடுத்து இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாணமான பாளி, இங்குள்ள இயற்கையான சூழல் காரணமாக இந்த இடம் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது, இயற்கை எழில் கொஞ்சும் பாளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பலரும் விரும்புவதனால் இந்த இடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தியில் முதன்மை இடம், டச்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள், பழமையான அருங்காட்சியகங்கள், மழைக்காடு மற்றும் ஏராளாமான அம்சங்கள் பொதிந்துள்ள இலங்கையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முன்னிலை வகித்து வருகிறது, இதன் காரணமாக கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலாத்தலங்களில் தவிர்க்க முடியாத இடத்தினை இலங்கை பிடித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையிலும் இலங்கை அரசு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா,தாய்லாந்து,அந்தமான், நிகோபர் தீவுகள், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற இடங்களும் தங்களுக்கே உரித்தான தனிச்சிறப்பான அம்சங்களால் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து கூகுளில் அதிகளவு தேடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.