போர்நிறுத்த காலத்தில் ஆயுதங்களைக் குவிக்கும் ஈரான்...! ட்ரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ஈரான் போர்நிறுத்த அமைதிக்காலத்தைத் தவறாகப் பயன்படுத்தி மீண்டும் ஆயுதங்களைக் குவிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத பலம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய போர்நிறுத்தக் காலத்தில் ஈரான் தங்களை ரீலோட் (Reload) செய்திருக்கலாம் எனக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, வெளிப்படையாக அமைதி காப்பது போலத் தெரிந்தாலும் திரைமறைவில் ஈரான் தனது ஆயுத பலத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்த ட்ரம்ப், அவர்களின் செயல்பாடுகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும் ஈரான் மீதான முழுமையான நம்பிக்கையை அமெரிக்கா இன்னும் பெறவில்லை என்பதையே ட்ரம்பின் பேச்சு பிரதிபலிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |