கோபால் பாக்லேவை சந்தித்த மகிந்த யாப்பா அபேவர்தன : இந்தியாவின் உதவிகள் தொடர்பிலும் பேச்சு! (படங்கள்)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கிடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு கோபால் பாக்லே நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்த முதலாவது நாடு இந்தியா என மகிந்த யாப்பா அபேவர்தன இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர்
இதற்கு சபாநாயகர் நன்றி தெரிவித்ததோடு, இலங்கை மற்றும் இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு கோபால் பாக்லே வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The Outgoing Indian High Commissioner to Sri Lanka Gopal Baglay called on the Speaker, Hon. Mahinda Yapa Abeywardena today (28) in Parliament.
— Parliament of Sri Lanka (@ParliamentLK) November 28, 2023
? https://t.co/SfbC5QoS1C#SLparliament #lka #SriLanka ?? #India ?? #9thParliamentLK pic.twitter.com/GRIqIWZHXR
அரசியலமைப்பு பேரவை மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிக்கும் ரணில் : குற்றம் சாட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |