மிரட்டப்பட்ட மாவை?
யாழில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம் தமிழரசுக் கட்சியின் முந்திரிக்கொட்டை என்று கூறப்படுகின்ற 'சுமோ'.
கிளிநொச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு 'சீட்' கிடைக்கவில்லை எண்டதும், தனது ஆதரவாளர்களை ஒரு சுயேச்சைக் குழுவாக தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே களமிறக்கி தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட 'சுமோ', அதேபோன்றதொரு ஆட்டத்தை சாவகச்சேரியிலேயும் செய்துகாட்டியிருந்தார்.
வலிகாமம் வடக்கு நியமனத்திலேயும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறாராம்.
வலிவடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியல் சுகிர்தன் என்ற முன்னைநாள் தவிசாளரால் தயாரிக்கப்பட்டதாம். இவர் சுமோவின் ஆள் என்பதால் பட்டியல் பெறப்பட்டு மற்றைய ஆதரவாளர்களால் மாவையின் ஆசிர்வாதத்தோடு சுகிர்தன் பெயர் நீக்கப்பட்டதாம் .
உடனே அதிரடியாக மாவையின் வீட்டுக்கு விரைந்த 'சுமோ' மாவையை கூப்பிட்டு மிரட்டினாராம். ' ... என்ன list இல் ஏதாவது பிரச்சனையா என கேட்டபோது ... மாவை வளமைபோலவே இளிச்சுக்கொண்டு 'இல்லைத்தம்பி அது எல்லாம் சரி.. நீங்கள் விரும்பினாக்களைப் போடுங்கோ' எண்டாராம் ...
'..கிளிநொச்சி, சாவகச்சேரிக்கு சுயேட்சை போட்ட எனக்கு வலிவடக்கு போடுவது கஷ்டம் இல்லை..' எண்டாராம் சுமோ.
மாவை பெட்டிப்பாம்பாக அடங்கி வளமைபோலவே 'ஈஈஈ..' என்று இளிச்சுக்கொணடு ' அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..' என்று கூறிவிட்டு படுக்கைக்கு போய்விட்டாராம்.
' இவன் சுமோ கட்சியை உடைத்துப்போட்டுத்தான் மறுவேல பாப்பான். வந்த வேலைய சரியாச் செய்யுறான்..' என்று கொதித்துக்கொண்டிருந்தாராம் கிளிநொச்சிப் பண்ணையார்.
கடுப்பிலிருந்த கிளிநொச்சி பண்ணையாரை மேலும் கடுப்பேற்ற அவரது அள்ளக்கை அவரிடம் ஒரு கேள்வியை கேட்டுதாம். ' நீங்கதானே அண்ண சுமோவை அன்டன் பாலசிங்கம் ஐயாவோட ஒப்பிட்டு, கடந்த தேர்தலில் காணாமல் போக இருந்த சுமோவ திரும்பவும் ஒளிவட்டத்துக்குள்ள கொண்டுவந்தனீங்க..'
அதுக்கு கிளிநொச்சிப் பண்ணையார், '..உது தவிர்க்கமுடியாத ஒரு ராஜந்தந்திரிம். உனக்கு விளங்காது. உணவு மேசையில நடந்த ஒரு கூத்து. பேந்து சொல்லுறன்..' எண்டு சொன்னவராம்.
கிளிநொச்சியில உணவு மேசையில் தமிழரசின் முந்திரிக்கொட்டைக்கும், கிளிநொச்சிப் பண்ணையாருக்கும் இடையில் நடந்த அந்த 'ராஜதந்திரத்தை' நாங்களும் 'சொன்னாலும் குற்றத்தில' பேந்து சொல்லுறம்...
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)