கொரோனா கொத்தணி உருவாகும் வாய்ப்பு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
corona
police
people
ajithrohana
By Sumithiran
நாட்டின் தற்போதைய நிலையில், கொவிட் கொத்தணி உருவாவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலத்தில் முகக்கவசம் அணியாத 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிரிபத்கொட மற்றும் பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுகாதார அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், கொண்டாட்டங்களை நடத்த முடியாது. முகக்கவசம் அணியாமை காரணமாக இதுவரையில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, தொற்றுப் பரவல் காணப்படுகின்ற நிலையிலும், விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் காரணமாகவே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்